வேண்டும் வரம் தரும் அருள்மிகு வேதகிரிஸ்வரர்
தெய்வீகம் கமழும் ஊர்களை மூன்று வகையாக குறிப்பிடுவது வழக்கம், அவை மூர்த்தி சிறப்பு, தல சிறப்பு, தீர்த்த சிறப்பு இவை மூன்றிலும் இத்திருக்கோவில் சிறந்து விளங்குகிறது. இங்கு ரிக் வேதம் வேராகவும், யஜுர் வேதம் மத்தியாகவும், சாம வேதம் அடியாகவும், அதர்வன வேதம் சிகரமாகவும் அமைந்ததால் இம்மலைக்கு (Vedhagiriswarar Temple) வேதகிரி என பெயர் பெற்றது. இந்த ஆலய மூலஸ்தானம் மூன்று பெரிய பாறைகளால் ஆக்கப்படிருக்கிறது. கருவறை உட்பக்க சுவர்களில், மேற்கில் சோமாஸ் கந்தரும், பிரம்மாவும், திருமாலும், வடக்கில் யோக தட்சிணா மூர்த்தியும், மார்க்கண்டேயர் சிவலிங்க பூசையும், தெற்கில் நந்திகேசுவரர், சண்டிகேசுவரர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக வேதகிரிஸ்வரர்(Vadhagiriswarar) அருள்பாலிக்கிறார். இந்த அதர்வண வேதமலை உச்சி மீது சுயம்பு உருவில் (தானாக மணலால் தோன்றியது) அமைந்த லிங்க ரூபம், காலத்தாலும் அபிஷேகம், பூஜை மற்றும் நீராலும் கரையாமல் இருக்க கவசம் அளிக்கப்பட்ட திருவுருவம், மலை மீது அமைந்த இறைவனுக்கு மலைக்கொழுந்து என்ற திருநாமமும் உண்டு.
இந்த தலத்தில்(Vedhagiriswarar Temple) கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கு இல்லாமல் இருப்பது சிறப்பு அம்சமாகும். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம் (Sangu Theertham). இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனமுருக வேண்டினால் முழுமையாக குணமடையலாம்.

திருப்பம் தரும் அன்னை திரிபுரசுந்தரி அம்மன்
அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். அம்பாள் மூர்தம் அஷ்ட கந்தகம் உட்பட எட்டு விதமான வாசனை பொருட்களால் ஆக்கபட்டது. அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் அம்மனுக்கு திருபாதத்தில் மட்டுமே பூஜை நடக்கின்றது. அகில உலகத்தை காக்கும் நாயகியாம் திரிபுர சுந்தரியை வருடத்தில் 3 முறை நடைபெறும் மகாஅபிஷேகத்தில் வணங்கினால் பாவம் போக்கி நல்லன நடக்கும்.இங்கு திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆடி மாதத்தில் 10 நாள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
திருமாள் வழிப்பட்ட திருக்கழுக்குன்றம் தலம்
திருமால் உபேந்திர பதவியில் இருக்கும் போது தேவர்கள் அவரிடம் வந்து அரக்கர்கள் தங்களை துன்புருத்துவதினின்றும் காக்குமாறு வேண்டினர். திருமால் அவர்கள் வேண்டுகோளுக்கினங்கி அவுனர்களை கொல்வதற்குச் சென்றனர். அவுனர்கள் பயந்து ஓடி வனத்தில் புகுந்தனர். வனத்தில் இருந்த பிருகு முனிவரின் ஆசிரமத்தை அடைந்து பிருகு பத்தினியிடம் தங்களை காக்குமாறு வேண்டினர். அவ்வம்மையார் அவர்களை ஆசிரமத்தில் ஒளித்து வைத்து வாயிற்படியில் ஒரு சட்டுவத்துடன் நின்றனர். அரக்கர்களை தேடி வந்த திருமால் பிருகு முனிவரின் மனைவியை நோக்கி அரக்கர்கள் உங்கள் ஆசிரமத்தில் இருக்கிறார்கள் வழிவிடுங்கள் என்றார். அவ்வம்மையார் அடைக்கலமாக வந்தவர்களை விடுவது அறமன்று என்றார். திருமால் அறிவுள்ள பிருகு பத்தினியே! நீ அரக்கர்களை விடாமல் தடுத்தனை எனக் கோபித்து அவ்வனம் முழுவதும் தீயில் முழுகும் படி சக்கரத்தை ஏவினார். அந்த சக்கரம் அந்த காடும், அரக்கர்க்ளும் பிருகு முனிவரின் பத்தினியும் வேகும்படி கோபதத்துடன் சுட்டது. சிவப்பெருமானால் முப்புரத்தவர்கள் இறந்தது போல் அவ்வரக்கர்களும் முனிவரின் மனைவியும் அழிந்தார்கள். அவ்வமயம் பிருகு முனிவர் அங்கு வந்தார். தன் மனைவியும் பெரிய வனமும் அழிந்தது. திருமால் ஏவிய சக்கரப்படையால் என்றறிந்து, தன் மனைவியிடத்து வைத்து அன்பினால் மனம் வாடினார். இத் திருமால் திருமகளை விரும்பிய காதலையுடையவன். பின் வருவதையறிகிலன், பெண் கொலையையும் கருதவில்லை. அடைக்கலமாக வந்தவர்களை காப்பது அறமாகும். இச்செயலைச் செய்த என் மனைவியைக் கொன்றது அறமாகுமோ எனத் திருமாலை நோக்கி நீ சக்கரமேந்தியது அனைவரையும் காப்பதற்காகும். தேவர்களுக்கு நன்மையும் மேன்மையும் செய்யும் தவத்தினரைக் கொல்வதற்கன்று. என் மனைவியைக் கொன்று துன்பத்தினை விளைவித்த நீ எடுக்கும் பத்துப் பிறவியில் ஊரையும் விட்டு, அறிவுமயங்கி உயிர்வனத்திற்குபோய் மனைவியைப் பிரிந்து நீயும் தவிக்கக்கடவை எனச் சாபமிட்டார். திருமால் பிருகு முனிவரை நோக்கி உமது மனைவியை இப்போது எழுப்பித் தருகிறேன். என் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் என்று அவர் மனைவியை கொன்ற சக்கரத்தை எதிரில் வைத்து, தன் கால் பெரிய விரலைப் பூமியில் ஊன்றினர். ஊன்றிய இடத்தில் குளிர்ந்த நீருண்டாகியது. அந்த நீரைப் பிருகு முனிவரின் மனைவின் எலும்புகூடு மீது தெளித்தார். தெளித்தவுடன் அவள் உயிர் பெற்றெழுந்தாள். பிருகு முனிவர் மகிழ்ந்து பலவாறு புகழ்ந்து இந்த நாளில் நானிட்ட சாபப்படி அந்த நாளில் தேவர்களுக்கு உதவியாய் நீ செல்லுங் கானகத்தில் உன் மனைவியை பிரிவாய் .பிறகு நீ அரக்கர்களை கொன்று உன் மனைவியை அடைவாய். நீ முனி பத்தினியை கொன்ற பாவம் நீங்க வேதகிரியை அடைந்து பூசிப்பாயாக எனக் கூறினார். பிறகு திருமால் வேதகிரியை அடைந்து திருமஞ்சன நீர் திருப்பள்ளித்தாமம் முதலியவற்றைக் கொண்டு வேத நெறிப்படி பூசனை செய்து வேதகிரீசன் திருவருளை பெற்று தம்பதம் சென்றார். திருமால் அதற்கு முன்னும் திரிபுரத்தில் இருந்த அவுனர்கள் செய்யும் சிவ பூசை வழுவும் படி செய்த மாயத்தால் விளைந்த பாதகம் தொலையும் படியும் பிறகு கிருட்டினனாகப் பிறந்த போது மாமனைக் கொன்று பாதகமும் தொலைய வேதகிரி வந்து பூசித்து தொழுது சென்றார். நாராயணன் வழிபட்டதால் இத்தலத்திற்கு ”நாராயணபுரி” எனும் பெயருண்டாகியது.
பாடல் பெற்ற திருத்தலம்
ஒரு நாவால் உலகை ஆண்ட திருஞாவுக்கரசரும், சீர்காழிப் பிள்ளையார் திருஞானசம்பந்தரும், தம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி சுவாமிகளும், தெய்வத்திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும், அருந்தவ புதல்வர் அருணகிரிநாதரும் பைந்தமிழ்ப் பாவேந்தர் பட்டினத்தாரும் காதலால் கசிந்து உருகிக் கண்ணிர் மல்கப் பாடியுள்ள திருத்தலம்.
இந்திரன் வணங்கும் தலம்
மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வார். இதற்கு ஏற்றாற்போல் கோயில் விமானத்தில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வார். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.
பௌர்ணமி கிரிவலம்
வேதமே மலையாக காட்சியளிப்பதால் கிரிவலம் வந்து இறைவன் அருளை பெற வேண்டும் என்று நால்வரால் தொடங்கப்பட்டது கிரிவலம். எனவே இத்தலத்தில் பௌர்ணமி கிரிவலம்(pournami giri valam) மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்தாக இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின் (pournami girivalam)போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர். மலை வலம் வரும் வழியில் மருந்து மலைச்சாரல் சஞ்சீவி காற்று வீசும் இடம் உள்ளது. இங்கு அமர்ந்து மூலிகை காற்றைச் சுவாசித்து பலனடைந்தோர் ஏராளம். நான்கு மலைத்தொடர்களில முலிகைகள் நிறைந்துள்ளதால் அன்றாடம் காலை நீராடி இம்மலைத் தொடரை பிரதட்சணமாக வந்தால் மூலிகைக காற்றுப்பட்டு தீராத வியாதிகள் கூட போய்விடும். முக்கியமாக செவ்வாய்கிழமை கிரிபிரதட்சணம் செய்து இவ்விறைவனை வழிபடுவது சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது
கருத்துகள்
கருத்துரையிடுக